கிளை அளவில் இருந்து மதிமுகவை வலுப்படுத்த வேண்டும்: தொண்டர்களுக்கு வைகோ அறிவுரை
மதிமுகவை கிளை அளவில் இருந்து வலுப்படுத்த வேண்டும் என தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை: மதிமுகவை கிளை அளவில் இருந்து வலுப்படுத்த வேண்டும் என தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை, எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது: நான் கொள்கைகளை காதலிக்கிறவன். லட்சியங்களுக்காக வாழ்பவன். நான் திமுகவில் 30 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அங்கிருந்தபோது 27 முறை சிறைக்கு சென்றேன். திமுகவின் தலைவருக்கு உயிருக்கு உயிரான மெய்காப்பாளராக இருந்து இருக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் முன்னிலையில் 1964-ம் ஆண்டு அங்கீகாரம் பெற்றேன். நான் செல்லாத கிராமங்கள் இல்லை.