சாத்தனூர் அணை திறப்பில் செம்பரம்பாக்கம் போலவே தவறு செய்த திமுக அரசு: அன்புமணி குற்றச்சாட்டு

செம்​பரம்​பாக்​கத்​தில் நடந்த அதே தவறைத்​தான் சாத்​தனூர் அணை திறப்​பில் திமுக அரசு செய்​துள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

சாத்தனூர் அணை திறப்பில் செம்பரம்பாக்கம் போலவே தவறு செய்த திமுக அரசு: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: செம்​பரம்​பாக்​கத்​தில் நடந்த அதே தவறைத்​தான் சாத்​தனூர் அணை திறப்​பில் திமுக அரசு செய்​துள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்பாக அன்புமணி வெளி​யிட்ட அறிக்கை​: தமிழக அரசு தெரி​வித்​துள்ள விவரங்​களின்படி சாத்​தனூர் அணையின் நீர்​மட்டம் 119 அடி. அதன் கொள்ளளவு 7.32 டிஎம்சி. கடந்த நவம்பர் 30-ம் தேதி காலை நிலவரப்படி அணையின் நீர்​மட்டம் 117.55 அடி. அதாவது ஒன்றரை அடி நீர்​மட்டம் உயர்ந்​தாலே அணை நிரம்பி பேரழிவு ஏற்பட்​டிருக்​கும்.