சென்னை | போலி தூதரக சான்றிதழ் சமர்ப்பித்த 6 பேரில் 3 பேரின் எம்பிபிஎஸ் சீட் ரத்து

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது. அதில் எந்தவிதமான முறைகேடுகளும் நிகழாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

சென்னை | போலி தூதரக சான்றிதழ் சமர்ப்பித்த 6 பேரில் 3 பேரின் எம்பிபிஎஸ் சீட் ரத்து

சென்னை: போலி தூதரக சான்றிதழ் சமர்ப்பித்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (என்ஆர்ஐ) இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் இடங்கள் பெற்ற 3 பேரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது. அதில் எந்தவிதமான முறைகேடுகளும் நிகழாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.