“கூட்டணி குறித்து பேராசை இல்லை” - நூல் அறிமுக நிகழ்வில் திருமாவளவன் பேச்சு
தற்காலிக அதிகாரத்துக்காக அம்பேத்கரின் வழியில் இருந்து விசிக-வால் நழுவ முடியாது, என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: “தற்காலிக அதிகாரத்துக்காக அம்பேத்கரின் வழியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் நழுவ முடியாது,” என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை, அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை குறித்து அவரது உறவினர் ஆனந்த் டெல்டும்டே எழுதிய ‘iconoclast’ நூல் அறிமுக நிகழ்ச்சி இன்று (டிச.7) நடைபெற்றது. இதில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் பேசியது: “எல்லோரும் அம்பேத்கருக்கு பிறந்தநாள் கொண்டாடுவதன் மூலம் அவரை இந்து தலைவராக அடையாளப்படுத்தி விழுங்க பார்க்கின்றனர். இதைத் தடுப்பது நம் முன் இருக்கும் சவால். தற்காலிமான அதிகாரத்துக்காக அம்பேத்கரின் வழியில் இருந்து நம்மால் நழுவ முடியாது.