கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான ‘அல் உம்மா’ தலைவர் பாஷா உயிரிழப்பு

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, அல் உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா இன்று (டிச.16) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான ‘அல் உம்மா’ தலைவர் பாஷா உயிரிழப்பு

கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, அல் உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா இன்று (டிச.16) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

கோவை தெற்கு உக்கடம், பொன்விழா நகரில் உள்ள ரோஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஏ.பாஷா (74). தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத் தலைவராக இருந்தார். கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக எஸ்.ஏ.பாஷா கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.