கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பழனிசாமியை ஏன் விசாரிக்கக் கூடாது? - ஐகோர்ட் கேள்வி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வரான பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், விசாரிக்க உத்தரவிடக்கோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வரான பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.
முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்.23 அன்று ஓம்பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஷோலூர்மட்டம் போலீஸார் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சயான், மனோஜ், தீபு உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.