சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முயற்சி: மண்டபம் முகாமை சேர்ந்த 4 பேர் கைது
ராமேசுவரத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற பெண் உள்பட 4 இலங்கை தமிழர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற பெண் உள்பட 4 இலங்கை தமிழர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 310-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.