மாமல்லபுரம் சாலை விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி

பழைய மாமல்லபுரம் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மாமல்லபுரம் சாலை விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி

சென்னை: பழைய மாமல்லபுரம் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், பழைய மாமால்லபுரம் சாலை, பையனூர் மதுரா பண்டிதமேடு சந்திப்பில் இன்று (27.11.2024) பிற்பகல் 2.20 மணியளவில் திருப்போரூர் வட்டம், பையனூர் கிராமம், பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆந்தாயி (வயது 71) க/பெ.முத்தன், லோகம்மாள் (வயது 56) க/பெ.சின்ராஜ், யசோதா (வயது 54) க/பெ.கோவிந்தசாமி, விஜயா (வயது 53) க/பெ.சாமிநாதன் மற்றும் கௌரி (வயது 52) க/பெ.குப்பன் ஆகிய 5 பெண்கள் சாலையோரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.