புதுச்சேரி, காரைக்காலில் வியாழக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு மழை விடுமுறை
புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (நவ.28) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி: புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (நவ.28) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தொடர்ந்து மழை பொழிவு இருந்ததால் இன்று (நவ.27) புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, புதுச்சேரியில் மழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை மற்றும் மழைக்கால நடவடிக்கைகள் புதுச்சேரி, காரைக்காலில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.