‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25-ல் ரிலீஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு

‘சூர்யா 44’ படத்தின் தலைப்புடன் கூடிய ‘டைட்டில் டீசர்’ இம்மாதம் 25-ம் தேதி வெளியாகிறது. கிறிஸ்துமஸ் பரிசாக அன்றைய தினம் டைட்டில் டீசர் வெளியாகும் என்று 2டி நிறுவனம் அதிகாரபூர்மாக அறிவித்துள்ளது. 

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25-ல் ரிலீஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: ‘சூர்யா 44’ படத்தின் தலைப்புடன் கூடிய ‘டைட்டில் டீசர்’ இம்மாதம் 25-ம் தேதி வெளியாகிறது. கிறிஸ்துமஸ் பரிசாக அன்றைய தினம் டைட்டில் டீசர் வெளியாகும் என்று 2டி நிறுவனம் அதிகாரபூர்மாக அறிவித்துள்ளது.

‘கங்குவா’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் ‘சூர்யா 44’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிகட்ட பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளது.