“நான் ‘வாராரு, வாராரு அழகர் வாராரு’ பாடல் மூலமே பிரபலம் ஆனேன்” - மதுரையில் தேவா பெருமிதம்
“எவ்வளவோ பாடல் பாடினாலும் ‘வாராரு வாராரு அழகர் வாராரு ’ என்ற பாடல் மூலமே பிரபலமானேன். இதற்காக கேப்டன் விஜயகாந்துக்கு கடமைப்பட்டுள்ளேன்,” என்று, இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.
மதுரை: “எவ்வளவோ பாடல் பாடினாலும் ‘வாராரு வாராரு அழகர் வாராரு ’ என்ற பாடல் மூலமே பிரபலமானேன். இதற்காக கேப்டன் விஜயகாந்துக்கு கடமைப்பட்டுள்ளேன்,” என்று, இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி ஜனவரி 18-ல் மதுரை யா.ஒத்தக்கடை அருகிலுள்ள மைதானத்தில் நடக்கிறது.இது தொடர்பாக மதுரை சுற்றுச்சாலையிலுள்ள தனியார் ஹோட்டலில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை திருவிழாவின்போது நான் இசையமைத்த எனது பாடலான ‘வாராரு வாராரு அழகர் வாராரு ’ என்ற பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். எவ்வளவோ பாடல் பாடினாலும் ‘வராரு வராரு கள்ளழகர் வாராரு’ என்ற பாடல் மூலமே பிரபலமானேன். அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். இதற்காக கேப்டன் விஜயகாந்திற்கு கடமைப்பட்டுள்ளேன். இந்த பாடலை முதல்முறையாக மதுரை மண்ணில் பாட இருக்கிறேன். இதற்கான வாய்ப்பை கேப்டன் விஜயகாந்த் எனக்கு அளித்து இருக்கிறார்.