சென்னை: பயணச்சீட்டு கருவியில் யுபிஐ பயன்பாட்டை அதிகரிக்க நடத்துநர்களுக்கு பயிற்சி

பயணச்சீட்டு கருவியில் யுபிஐ பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பாக மாநகர பேருந்து நடத்துநர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

சென்னை: பயணச்சீட்டு கருவியில் யுபிஐ பயன்பாட்டை அதிகரிக்க நடத்துநர்களுக்கு பயிற்சி

சென்னை: பயணச்சீட்டு கருவியில் யுபிஐ பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பாக மாநகர பேருந்து நடத்துநர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்.28-ம் தேதி முதல் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மின்னணு பயணச்சீட்டு வழங்கும் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது கருவி வாயிலாக
மட்டுமே பயணசீட்டு வழங்கப்பட்டு வருகிறது. எனினும், மின்னணு பயணச்சீட்டு வழங்கும் கருவியில் யுபிஐ மற்றும் டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை குறைவாக இருக்கிறது.