சென்னை - மைசூரு அதிவிரைவு ரயில் சாதாரண விரைவு ரயிலாக ஜன.3 முதல் மாற்றம்

சென்னை - மைசூரு இடையிலான அதிவேக விரைவு ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு, வரும் ஜன.3-ம் தேதி முதல் சாதாரண விரைவு ரயிலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - மைசூரு அதிவிரைவு ரயில் சாதாரண விரைவு ரயிலாக ஜன.3 முதல் மாற்றம்

சென்னை: சென்னை - மைசூரு இடையிலான அதிவேக விரைவு ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு, வரும் ஜன.3-ம் தேதி முதல் சாதாரண விரைவு ரயிலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் - மைசூரு அதிவிரைவு ரயில், மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு பெங்களூருவை அடையும். இரவு 10 மணிக்கு மைசூருவை சென்றடையும். இந்த ரயில் 23 நிலையங்களில் நின்று செல்கிறது. 497 கி.மீ. தூரத்தை 9 மணி 15 நிமிடங்களில் கடக்கும் இந்த ரயில் சராசரியாக மணிக்கு 54 கிமீ வேகத்தை கொண்டிருக்கிறது. இந்த ரயில் முதலில், சென்னை - பெங்களூரு இடையே இயக்கப்பட்டது. இதன்பிறகு, 2019-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து மைசூரு வரை நீட்டிக்கப்பட்டது.