தமிழகத்தில் மலையேற்ற கட்டணம் 25% வரை குறைப்பு
தமிழகத்தில் 40 வழித்தடங்களுக்கான மலையேற்றக் கட்டணம் 25 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழகத்தில் 40 வழித்தடங்களுக்கான மலையேற்றக் கட்டணம் 25 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
2018-ல் தேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மலையேற்றம் சென்ற 23 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மலையேற்றத்துக்கு வனத் துறை தடை விதித்தது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்கை பற்றிய புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் மலையேற்றத்துக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.