சென்னை | விமான நிலையத்தில் ஜிபிஎஸ் கருவி பறிமுதல்: ஆந்திரா இளைஞர் போலீஸில் ஒப்படைப்பு
சென்னை விமான நிலையத்தில் ஜிபிஎஸ் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா நாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற ஆந்திரா நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஜிபிஎஸ் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா நாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற ஆந்திரா நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
சென்னையில் இருந்து எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடிஸ் அபாபா செல்லும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை புறப்பட தயாராகி கொண்டிருந்தது. பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.