செம்பரம்பாக்கம் ஏரியில் 4,500 கனஅடி உபரிநீர் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4500 கனஅடி உபரிநீர் இன்று (டிச.13) திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியை  ஆய்வு செய்தார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் 4,500 கனஅடி உபரிநீர் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4500 கனஅடி உபரிநீர் இன்று (டிச.13) திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர் மட்டம் 24 அடியாக உயர்ந்தது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3453 மில்லியன் கன அடி என்ற நிலையில் ஏரிக்கு வினாடிக்கு 6498 கன அடி நீர் வந்து கொண்டிருந்ததது. இதன் காரணமாக ஏரி முழு கொள்ளவை எட்டும் நிலையில் இருந்ததால் முதல் கட்டமாக ஆயிரம் கன அடி உபரி நீர் காலையில் திறக்கப்பட்டது.