சொர்க்கவாசல் Review: சிறைக் களத்தில் ஒரு நேர்த்தியான திரைப் படைப்பு!

நரகத்தில் இருப்பவனுக்கு சொர்க்கத்துக்கு போக சாவி கிடைத்தால், அந்த சாவியை அவன் எப்படி பயன்படுத்துகிறான் என்பது ‘சொர்க்கவாசல்’ படத்தின் ஒன்லைன்.

1999-ம் ஆண்டு சென்னை மத்திய சிறையில் கலவரம் வெடித்து பல உயிர்கள் பலியாகின்றன. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டு ஓய்வு பெற்ற நீதிபதி இஸ்மாயில் (நட்டி நடராஜன்) தலைமையிலான ஆணையத்தை அமைக்கிறது அரசு. அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையில் கதை சொல்லப்படுகிறது. அதன்படி மத்திய சிறையில் இருக்கும் ரவுடியான சிகா (செல்வராகவன்) திருந்தி வாழ ஆசைப்படுகிறார். ஆனால், புதிதாக வரும் காவல் அதிகாரி, சிகாவை ஒன்றுமில்லாமல் முடக்க நினைக்கிறார்.