தஞ்சை தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் சஸ்பெண்ட் ஏன்? - ஆளுநர் உத்தரவின் முழு விவரம்
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக ஆளுநர் உத்தரவில் முழு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக ஆளுநர் உத்தரவில் முழு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் வி.திருவள்ளுவன். அவரது பதவிக்காலம் டிசம்பர் 12-ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், அவரை கடந்த 19-ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். துணைவேந்தர் திருவள்ளுவன் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில், துணைவேந்தரை சஸ்பெண்ட் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி பிறப்பித்துள்ள உத்தரவில் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கான முழு விவரமும் இடம்பெற்றுள்ளது.