தமிழகத்தின் நஞ்சராயன், கழுவேலி பறவைகள் சரணாலயங்களை ராம்சார் தளங்களாக அறிவித்தது மத்திய அரசு!

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், 2024 சுதந்திர தினத்தை முன்னிட்டு, மேலும் மூன்று ஈரநிலங்களை ராம்சர் தளங்களாக அறிவிப்பதன் மூலம், இந்தியா தனது ராம்சர் தளங்களின் எண்ணிக்கை தற்போதுள்ள 82-லிருந்து 85 ஆக உயர்த்தியுள்ளது என்று கூறினார். 

தமிழகத்தின் நஞ்சராயன், கழுவேலி பறவைகள் சரணாலயங்களை ராம்சார் தளங்களாக அறிவித்தது மத்திய அரசு!

புதுடெல்லி: மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், 2024 சுதந்திர தினத்தை முன்னிட்டு, மேலும் மூன்று ஈரநிலங்களை ராம்சர் தளங்களாக அறிவிப்பதன் மூலம், இந்தியா தனது ராம்சர் தளங்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 82-லிருந்து 85 ஆக உயர்த்தியுள்ளது என்று கூறினார்.

மேலும் அவர், சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்று ராம்சார் தளங்கள் சேர்க்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இயற்கையுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நமது ஈரநிலங்களை அமிர்த தாரோஹர்கள் என்று அழைப்பதற்கும், அவற்றின் பாதுகாப்புக்காக அயராது உழைப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதை இந்த சாதனை பிரதிபலிக்கிறது.