“தம்பி விஜய்க்கு ஒரு சிக்கல் என்றால் நான் தான் முதலில் நிற்பேன்!” - சீமான் சீரியஸ் நேர்காணல்
அதிரடி பேச்சுகளால், தமிழக அரசியல் களத்தை அவ்வப்போது அலற விடுபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அதிரடி பேச்சுகளால், தமிழக அரசியல் களத்தை அவ்வப்போது அலற விடுபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். பிற கட்சிகள் எல்லாம் கூட்டணி கடை விரித்து காத்துக் கொண்டிருக்க, அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இப்போதே 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வேட்பாளர்களை தில்லாக அறிவித்து தேர்தல் பணிகளில் பரபரப்பாகிவிட்டார் சீமான். ரஜினியுடனான சந்திப்பு, விஜய்யின் அரசியல் விஜயம், கஸ்தூரிக்கு ஆதரவான கருத்து என பல்வேறு விவகாரங்கள் குறித்து, 'இந்து தமிழ் திசைக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து...
ரஜினியை நீங்கள் சந்தித்தது ஒரு பெரிய விவாதமாக மாறி விட்டது. இந்த சந்திப்பு உங்களைப் பலவீனப்படுத்திவிட்டதாக உணர்கிறீர்களா?