“திமுகவை வீழ்த்த பாஜக கூட்டணிக்கு அதிமுக வரவேண்டும்” - தினகரன் அழைப்பு
திமுகவை வீழ்த்த அதிமுக பாஜக கூட்டணிக்கு வர வேண்டும், என்று எடப்பாடி பழனிசாமிக்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரை: “திமுகவை வீழ்த்த அதிமுக பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்,” என்று எடப்பாடி பழனிசாமிக்கு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரை கோச்சடையில் உள்ள தனியார் விடுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், 10 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒரே நாடு ஒரே தேர்தல், நடைமுறைக்கு எப்படி வரும் என தெரியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும்போது தான் தெரியவரும்.