தமிழகத்தில் 77 ரயில் நிலையங்களை தரம் உயர்த்த திட்டம்: திமுக எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்
அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் 71 ரயில் நிலையப் பணிகளுக்கான வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.
புதுடெல்லி: ரயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உட்பட அவற்றின் தரத்தை மேம்படுத்த அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் 71 ரயில் நிலையப் பணிகளுக்கான வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு, ‘தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களை தரம் உயர்த்தும் திட்டம் இருக்கிறதா? அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? அந்த வேலைகள் எப்போது முடியும்’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலின் விவரம்: “இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உட்பட அவற்றின் தரத்தை மேம்படுத்த அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.