“திருமாவளவன் போல் ஆதவ் அர்ஜுனாவிடம் விஜய் ஏமாறக் கூடாது” - தமிழக பாஜக எச்சரிக்கை
பாஜகவை இனியும் விமர்சித்தால் கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் சதுரங்கத்தில் ஆதவ் அர்ஜுனா செய்த சட்டவிரோத நடவடிக்கைகள், பணப்பரிமாற்றங்களை மக்களின் முன்னே வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அம்பலப்படுத்த வேண்டி வரும் என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் எச்சரிக்க விடுத்துள்ளார்.
சென்னை: “பாஜக இரண்டு சதவீத கட்சி அல்ல. 12 கோடி மக்களின் இதயங்களை இணைத்து உலகின் மிகப் பெரிய கட்சியாக செயல்பட்டு இந்தியாவை ஆளுகின்ற கட்சி. பாஜகவை இனியும் விமர்சித்தால் கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் சதுரங்கத்தில் ஆதவ் அர்ஜுனா செய்த சட்டவிரோத நடவடிக்கைகள், பணப்பரிமாற்றங்களை மக்களின் முன்னே வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அம்பலப்படுத்த வேண்டி வரும்” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் எச்சரிக்க விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த லாட்டரி பணத்தில் நடக்கும் விழாவில் உள்ள அரசியல் சூழ்ச்சியை நடிகர் விஜய் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளை கோட்பாடுகளை வாழ்வியல் நெறிகளை தமிழகம் முழுக்க கொண்டு செல்வதற்கு நல்லவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும். திருமாவளவன் ஏமாந்தது போல்,விஜய்யும் ஏமாந்து விடக்கூடாது.