“மன்னிக்கவும்... நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை!” - விஜய் பேச்சுக்கு உதயநிதி ரியாக்ஷன்
“மன்னிக்கவும்... நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை” என்று விஜய் கருத்துகள் குறித்த கேள்விக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
வேலூர்: “மன்னிக்கவும்... நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை” என்று விஜய் கருத்துகள் குறித்த கேள்விக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
வேலூர் நிகழ்வில் கலந்துகொண்ட உதயநிதியிடம், நடிகர் விஜய் பேச்சு குறித்து கேட்டதற்கு, “மன்னிக்கவும்... நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை" என்றார். அதைத் தொடர்ந்து, மன்னராட்சி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பான கேள்விக்கு, "யாருங்க இங்க பிறப்பால் முதல்வரானது? மக்களால் தேர்ந்தெடுத்துதான் இருக்கிறோம். மக்களாட்சிதான் நடக்கிறது. இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் பேசி இருக்கிறார்” என்று ஆவேசமாக கூறினார் உதயநிதி ஸ்டாலின்.