உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் டிச.10 முதல் 13 வரை கனமழை வாய்ப்பு எங்கெல்லாம்?
‘வங்கக் கடலில் சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இம்மாதம் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: ‘வங்கக் கடலில் சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இம்மாதம் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (டிச.7) காலை 8.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடைந்து, மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிச.11- ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை - தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.