புயல், மழை பாதிப்புக்கான நிவாரணம், இழப்பீட்டை உயர்த்துக: அரசுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்
புயல் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை: புயல் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாமக நிறுவனர் ராமதாஸ்: சென்னையில் கடந்த ஆண்டு ‘மிக்ஜாம்’ புயலின்போது ரூ.6,000 இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், அவர்களை விட மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.2,000 மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் அநீதியானது. அனைவருக்கும் குறைந்தது ரூ.10,000, சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும்.