ஃபெங்கல் புயல் நாளை கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, நாளை (நவ.30) கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

ஃபெங்கல் புயல் நாளை கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, நாளை (நவ.30) கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகி புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 400 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 360 கிலோ மீட்டர் தொலைவிலும் வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது.