தூத்துக்குடியில் ஒரே நாளில் 2,271 மி.மீ மழை - தாமிரபரணி, காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. தாமிரபரணி ஆறு, காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் ஒரே நாளில் 2,271 மி.மீ மழை - தாமிரபரணி, காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. தாமிரபரணி ஆறு, காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் நிலவியது.

இந்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்க கூடும். மேலும் இன்று (டிச.14) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.