தென்பெண்ணை வெள்ளப் பெருக்கு பாதிப்பின் நிலவரம் என்ன?

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் குடியிருப்பில் சூழ்ந்த வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது. அதேவேளை யில் கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் பல கிராமங்களில் பாதிப்பு நீடித்து வருகிறது. 

தென்பெண்ணை வெள்ளப் பெருக்கு பாதிப்பின் நிலவரம் என்ன?

கடலூர்: கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் குடியிருப்பில் சூழ்ந்த வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது. அதேவேளை யில் கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் பல கிராமங்களில் பாதிப்பு நீடித்து வருகிறது.

சாத்தனூர் அணையில் நேற்று முன்தினம் விநாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடலூர் தென்பெண் ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாழங்குடா, குண்டு உப்பலவாடி, பெரிய கங்கணாங்குப்பம், சின்ன கங்கணாங்குப்பம், திடீர்குப்பம், எம்ஜிஆர் நகர், செம்மண்டலம், வெளிச் சமண்டலம், உண்ணாமலை செட்டிச்சாவடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.