நான் முதல்வன் திட்டத்துக்கு உலகெங்கும் வரவேற்பு: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
தமிழக முதல்வர் அமல்படுத்தியுள்ள நான் முதல்வன் திட்டத்துக்கு உலகெங்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. என, உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை: தமிழக முதல்வர் அமல்படுத்தியுள்ள நான் முதல்வன் திட்டத்துக்கு உலகெங்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. என, உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
‘நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ரூ 31 கோடி மதிப்பீட்டில் 29 அரசு பொறியியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையங்களை காணொலி காட்சி மூலம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்து கோவை தாடாகம் சாலையில் உள்ள ஜிசிடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தை நேரில் பார்வையிட்டார்.