பல்வேறு துறைகளில் திட்டப் பணிகளை துரிதமாக முடித்திட முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை சிறப்பாக வழங்கிடவேண்டும் என இன்று நடைபெற்ற துறை ரீதியான ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார்.
சென்னை: கடந்த ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகளை துரிதமாக முடித்திட வேண்டும் என இன்று நடைபெற்ற பல்வேறு துறைகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ''வேளாண்மை-உழவர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய துறைகளின் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (29.11.2024) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய துறைகளின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.