பாஜகவில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? - செந்தில் பாலாஜி கேள்வி

பாஜகவில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? - செந்தில் பாலாஜி கேள்வி

கரூர்: பாஜகவில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டப் பேரவைத் தொகுதி பொதுமக்களை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று (டிச.08) நடைபெற்றது. கரூர் மாநகராட்சி 47-வது வார்டு கோடங்கிப்பட்டி பட்டாளம்மன் கோயில் அருகில் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமை வகித்தார். காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா, எம்எல்ஏக்கள் ரா.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.