தீபத் திருவிழா: தி.மலையில் 156 பள்ளிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த ஒன்றாம் தேதி முதல் கார்த்திகை தீப திருவிழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 10-ம் தேதி மகா தேரோட்டமும், வரும் 13-ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படவுள்ளன

தீபத் திருவிழா: தி.மலையில் 156 பள்ளிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை

தி.மலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த ஒன்றாம் தேதி முதல் கார்த்திகை தீப திருவிழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 10-ம் தேதி மகா தேரோட்டமும், வரும் 13-ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படவுள்ளன.

கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் சுமார் 14 ஆயிரம் காவலர்கள் ஈடுபடவுள்ளனர். இவர்கள் தங்குவதற்காக திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் தங்க வைக்கப்படவுள்ளனர். இதனால், 156 பள்ளிகளுக்கு வரும் டிச. 9-ம் தேதி தேதி முதல் டிச.16-ம் தேதி வரை 8 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.