பிரேமானந்தா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட ஐ.டி நோட்டீஸை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

பிரேமானந்தா அறக்கட்டளைக்கு சஃபேமா சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரேமானந்தா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட ஐ.டி நோட்டீஸை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை: பிரேமானந்தா அறக்கட்டளைக்கு சஃபேமா சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இலங்கையில் ஆசிரமம் நடத்தி வந்த பிரேமானந்தா, அங்கு நடந்த உள்நாட்டு சண்டைக்குப்பிறகு தமிழ் அகதியாக கடந்த 1984-ம் ஆண்டு தமிழகம் வந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் 65 ஏக்கர் பரப்பில் சீடர்கள் சகிதமாக ஆசிரமம் அமைத்து செயல்பட்டார். கடந்த 1994-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார்.