புதுச்சேரியில் வடியாத மழை வெள்ளம்: பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை

ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியை வெள்ளம் சூழ்ந்திருப்பதாலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாகவும் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் வடியாத மழை வெள்ளம்: பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை

புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியை வெள்ளம் சூழ்ந்திருப்பதாலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாகவும் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை கரையைக் கடந்தது. புயல் காரணமாக சூறாவளி காற்றுடன் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் இடைவிடாது பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் புதுச்சேரி நகரப்பகுதி மட்டுமின்றி கிராமப் பகுதிகளும் வெள்ளக்காடானது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. புதுச்சேரியில் புயல் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.