புயலாக மாறுமா ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்? - சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாவது குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும். புயலைப் பொருத்தவரை, கடலின் வெப்பநிலை, கீழ்ப்பகுதியில் உள்ள காற்று, மேல்பகுதியில் காற்று விரிவடையும் தன்மை, மத்திய பகுதியில் ஈரப்பதம் செல்வது மற்ற நிகழ்வுகள் இவையெல்லாம் சேர்ந்துதான் முடிவு செய்யப்படும்.

புயலாக மாறுமா ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்? - சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்

சென்னை: “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவாவது குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும். புயலைப் பொருத்தவரை, கடலின் வெப்பநிலை, கீழ்ப்பகுதியில் உள்ள காற்று, மேல்பகுதியில் காற்று விரிவடையும் தன்மை, மத்திய பகுதியில் ஈரப்பதம் செல்வது மற்ற நிகழ்வுகள் இவையெல்லாம் சேர்ந்துதான் முடிவு செய்யப்படும். எனவே, தற்போது நிலவும் இந்த நிலை தொடரும்போது, அடுத்த வரும் 5 தினங்களுக்கு குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் நல்ல மழை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது,” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.