பொன்முடிக்கு எதிராக ஏன் இத்தனை பொல்லாப்பு? - சேறு வீசிய விவகாரத்தின் பின்னணி

அரசியல் செய்வதற்காக எனக்குப் பின்புறம் சேற்றை வீசி அடித்​துள்ளனர். இது குறித்து சமூகவலை​தளத்தில் யார் பதிவிட்டாரோ அவரது கட்சியைச் சேர்ந்​தவர்களே இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர்.

பொன்முடிக்கு எதிராக ஏன் இத்தனை பொல்லாப்பு? - சேறு வீசிய விவகாரத்தின் பின்னணி

விழுப்புரம் அருகேயுள்ள இருவேல்பட்டு கிராமத்தில் கடந்த 3-ம் தேதி புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் விழுப்புரம் ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் மீது ஒரு பெண் உட்பட இருவர் சேற்றை வாரி வீசியது பெரும் சர்ச்சையானது.

இது குறித்து செய்தி​யாளர்​களிடம் பேசிய பொன்முடி “அரசியல் செய்வதற்காக எனக்குப் பின்புறம் சேற்றை வீசி அடித்​துள்ளனர். இது குறித்து சமூகவலை​தளத்தில் யார் பதிவிட்டாரோ அவரது கட்சியைச் சேர்ந்​தவர்களே இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர். எனினும் நாங்கள் இதனைப் பெரிதுபடுத்தி அரசிய​லாக்க விரும்ப​வில்லை” என்று சாந்த​மாகச் சொன்னார். பொன்முடி அப்படி சுட்டிக்​காட்​டியது பாஜகவினரைத்​தான்.