மழை காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்: மக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள்

மழைக்​ காலங்​களில் பாது​காப்பு நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்​டும் என பொது​மக்​களுக்கு மின்​வாரியம் வேண்​டு​கோள் விடுத்​துள்ளது

மழை காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்: மக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள்

சென்னை: மழைக்​ காலங்​களில் பாது​காப்பு நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்​டும் என பொது​மக்​களுக்கு மின்​வாரியம் வேண்​டு​கோள் விடுத்​துள்ளது. இது தொடர்பாக வெளி​யிடப்​பட்ட செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரமான கைகளால் மின் ஸ்விட்​சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்​டாம். வீட்​டின் உட்புற சுவர் ஈரமாக இருந்​தால் மின்சார ஸ்விட்​சுகள் எதையும் இயக்கக் கூடாது. வீடுகள் மற்றும் கட்டடங்​களில் உள்ள ஈரப்​ப​தமான சுவர்​களில் கை வைப்பதை தவிர்க்க வேண்​டும். நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்​சாரம் வந்தவுடன் இயக்க வேண்​டாம். மின்சார மீட்டர் பொருத்​தப்​பட்​டுள்ள பகுதி ஈரமாக இருந்​தால் உபேயாகிக்கக் கூடாது.

வீட்​டில் மின்​சாரம் இல்லை​யென்​றால் அருகில் இருந்து தாங்​களாகவே ஒயர் மூலம் மின்​சாரம் எடுக்க வேண்​டாம். மின் கம்பிகள் அறுந்து கிடக்​கும் பகுதி​கள், மின்சார கேபிள்​கள், மின்சார கம்பங்​கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்​பார்​மர்கள் இருக்​கும் பகுதி​களுக்கு அருகில் செல்லக் கூடாது. சாலைகளி​லும், தெருக்​களி​லும் மின்​கம்​பங்கள் மற்றும் மின் சாதனங்​களுக்​கருகே தேங்​கிக் கிடக்​கும் தண்ணீரில் நடப்​பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ மற்றும் வாகனத்​தில் செல்​வதையோ தவிர்க்க வேண்​டும். தாழ்வாக தொங்​கிக் கொண்​டிருக்​கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்​வதை​யும், தொடு​வதை​யும் தவிர்க்க வேண்​டும்.