வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அண்ணாமலை மீது காவல் ஆணையரிடம் புகார்
வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்ககக் கோரி, சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்
வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்ககக் கோரி, சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தன்னை ஒரு தொண்டர் அழைத்து `கொலை செய்யப் போகிறேன். ஜாமீனில் எடுத்து விடுங்கள்` என்று கூறியதாக சொல்லி, `கட்சிக்கு எழுச்சி வந்துவிட்டது' என்று பேசியுள்ளார். சில நாட்களுக்கு முன்புதான் திருநெல்வேலி நீதிமன்றம் அருகே கொலை சம்பவம் அரங்கேறியது. வன்முறையைத் தூண்டி, சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் அண்ணாமலை பேசுகிறார்.