வ​யிற்றுப்​போக்​கால் 2 பேர் உயிரிழந்த சம்பவம்: பல்லாவரத்தில் மாநகராட்சி ஆணையர், அதிகாரிகள் ஆய்வு

பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதி மற்றும் பல்லாவரம் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதா என்பது குறித்து தண்ணீர் மாதிரி பரிசோதனைக்காக கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வ​யிற்றுப்​போக்​கால் 2 பேர் உயிரிழந்த சம்பவம்: பல்லாவரத்தில் மாநகராட்சி ஆணையர், அதிகாரிகள் ஆய்வு

தாம்​பரம்: பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதி மற்றும் பல்லாவரம் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதா என்பது குறித்து தண்ணீர் மாதிரி பரிசோதனைக்காக கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதி மற்றும் பல்லாவரம் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்தது என்ற புகாரின் அடிப்படையில் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ, தாம்பரம் மாநகராட்சி ஆணையர், பல்லாவரம் மண்டலக்குழு தலைவர் உள்ளிட்டோர் பல்லாவரம் கண்டோன்மெண்ட் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் காமராஜர் நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.