“ஆட்சியாளர்களின் கூட்டணி கணக்குகள் 2026 தேர்தலில் எடுபடாது” - திமுக மீது விஜய் கடும் தாக்கு
‘சுய நலத்துடன் ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் செய்துவிடுவார்கள்’ என்று, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை: ‘சுய நலத்துடன் ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் செய்துவிடுவார்கள்’ என்று, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில், நூலை வெளியிட்டு தவெக தலைவர் விஜய் பேசிய தாவது:இன்றைக்கு அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால், நம் நாட்டின் நிலைமையை நினைத்து பெருமைப்படுவாரா? வருத்தப்படுவாரா? நம் நாடு முழு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல். அது அமைய வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்து அடிப்படையில் தான் நியமிக்கப்பட வேண்டும்.