“விஜய் கூறியது போல் திருமாவளவனுக்கு அழுத்தம்...” - அதிமுக துணை பொதுச் செயலர் கே.பி.முனுசாமி கருத்து
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது விஜய் கூறியது போல் அழுத்தம் இருப்பதாகவே நாங்கள் உணர்கிறோம் என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி: “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது விஜய் கூறியது போல் அழுத்தம் இருப்பதாகவே நாங்கள் உணர்கிறோம்" என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில், கிழக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர், “அம்பேத்கர் நிகழ்ச்சியில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டிருக்க வேண்டும். அவர் கலந்துகொள்ள முடியாத ஒரு சூழல் வருகிறது என்றால், தவெக தலைவர் விஜய் கூறியது போல், அழுத்தம் இருப்பதாகவே நாங்கள் உணர்கிறோம். வாரிசு அடிப்படையில் தான் மு.க ஸ்டாலின் முதல்வராகி உள்ளார்.