விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு
‘புஷ்பா 2’ படத்தின் ப்ரீமியர் காட்சியின்போது படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (டிச.14) அதிகாலை ஹைதராபாத் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ படத்தின் ப்ரீமியர் காட்சியின்போது படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (டிச.14) அதிகாலை ஹைதராபாத் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். விடிய விடிய சிறையில் அவர் இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜுன் கைதுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
‘புஷ்பா 2’ படத்தின் ப்ரீமியர் காட்சியின்போது படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நாம்பள்ளி நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கிய நிலையில், அவருக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து அவர் இன்று (டிச.13) அதிகாலை அவர் ஹைதராபாத் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சிறையின் வேறு ஒரு வாயிலின் வழியாக அவர் வெளியேறிச் சென்றார்.