‘பிக் ஷார்ட்ஸ்’ சீசன் 3 குறும்பட போட்டி முடிவுகள் அறிவிப்பு
முன்னணி டிஜிட்டல் தளமான மூவீ பஃப், டர்மெரிக் மீடியாவுடன் இணைந்து ‘பிக் ஷார்ட்ஸ் சீசன் 3 குறும்பட போட்டியை சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது.
முன்னணி டிஜிட்டல் தளமான மூவீ பஃப், டர்மெரிக் மீடியாவுடன் இணைந்து ‘பிக் ஷார்ட்ஸ் சீசன் 3 குறும்பட போட்டியை சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அதில் நெல்லியன் கருப்பையாவின் ‘பீ லைக் குட்டியப்பா’ எனும் குறும்படம், முதன்மை பரிசான ரூ. 5 லட்சத்தைப் பெற்றது. முதலாவது ரன்னர்-அப் விருது, ‘அன்புடென்’ குறும்படத்தை இயக்கிய விக்னேஷ் வடிவேலுக்கும் 2-வது விருது ‘ரெண்டு’ குறும்படத்துக்காக பவன் அலெக்ஸுக்கும் 3-வது ரன்னர்-அப் விருது ‘கடவுளே’ குறும்படத்துக்காக பாலாபாரதிக்கும் கிடைத்தது. நான்காவது ரன்னர்-அப் விருதை ‘தி ஸ்பெல்’ என்ற குறும்படத்துக் காக பாலாஜி நாகராஜன் பெற்றார். முதல் மற்றும் 2-வது ரன்னர்-அப்-களுக்கு தலா ரூ. 3 லட்சம் மற்றும் ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டன. 3-வது மற்றும் 4-வது ரன்னர்-அப்-களுக்கு ரூ.30,000 மதிப்பிலான பரிசு கூப்பன் வழங்கப்பட்டன.
இயக்குநர்கள் அருண்குமார், ஹலிதா ஷமீம், கார்த்திக் சுப்பராஜ் உட்பட பலர் அடங்கிய நடுவர் குழுவின் முடிவின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். டர்மெரிக் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர். மகேந்திரன் கூறும்போது, “வளர்ந்து வரும் படைப்பாளிகளுக்கு மூவிபஃப் பிக் ஷார்ட்ஸ் மூலம் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கியதற்காக, க்யூப் சினிமாவை பாராட்டு கிறேன்" என்றார். விருது பெற்ற படங்கள் தமிழ் நாட்டின் 300 திரையரங்குகளில் திரையிடப்பட்டன.