‘புஷ்பா 2’ சம்பவம் எதிரொலி: சிறப்புக் காட்சி அனுமதி மறுப்பால் தெலுங்கு திரையுலகம் கலக்கம்

சிரஞ்சீவியை குறிப்பிடும் வகையில் ‘who is boss’ என்ற பொய்யான வசனம் இணையத்தில் பரவி வரும் நிலையில், ‘புஷ்பா 2’ படக்குழுவினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

‘புஷ்பா 2’ சம்பவம் எதிரொலி: சிறப்புக் காட்சி அனுமதி மறுப்பால் தெலுங்கு திரையுலகம் கலக்கம்

ஹைதராபாத்: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் பிரீமியர் திரையிடலின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், இனி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியில்லை என தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. இதனால் வசூலில் பின்னடைவு ஏற்படும் என தெலுங்கு திரையுலகினர் கலக்கத்தில் உள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் வசூல் சாதனை புரிந்து வருவது மட்டுமன்றி, சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறது. ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்கில் நடந்த பிரீமியர் ஷோவில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார். இதனால் இத்திரையரங்கில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ரசிகர்களை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண்ணும் ஸ்ரீதேஜ் என்ற அவரது மகனும் மயக்கம் அடைந்தனர்.