“வெள்ளம் பாதித்த மக்களுக்கு அரசின் ரூ.2,000 ஒருநாளுக்கு கூட காணாது” - பிரேமலதா கருத்து

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் ஒரு நாளுக்குக் கூட காணாது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

“வெள்ளம் பாதித்த மக்களுக்கு அரசின் ரூ.2,000 ஒருநாளுக்கு கூட காணாது” - பிரேமலதா கருத்து

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் ஒரு நாளுக்குக் கூட காணாது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தென்காசியில் இன்று நடந்த திருமணத்தில் பங்கேற்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். விமான நிலையத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டேன். இது மிகப் பெரிய பாதிப்பு. விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. அனைத்து பகுதிகளிலும் மழை வெள்ளம் புகுந்து சேரும் சகதியுமாக மாறி உள்ளன.