அதிக விலை; ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை கைவிடுக: அன்புமணி

அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

அதிக விலை; ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை கைவிடுக: அன்புமணி

சென்னை: அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் புதிய பச்சை உறை பால் வரும் 18-ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படும் என்று ஆவின் நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆனால், இது தொடர்பாக ஆவின் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் பாலின் தன்மை குறித்த விவரங்களோ, விலையோ இல்லை; மாறாக விட்டமின் ஏ, டி ஆகியவை சேர்க்கப்பட்டிருப்பதாக மட்டும் தான் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய பாலின் தன்மைகள் குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகளிடம் விசாரித்த போது தான் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவந்துள்ளன.