அழிவின் விளிம்பில் கருங்காலி மரம்! - மீட்கும் முயற்சியில் வன மரபியல் நிறுவனம்
அண்மைக்காலமாக கருங்காலி மாலை அணிந்தால் அதிர்ஷ்டம் வரும், ஆன்மிக பலம் பெருகும், தீய சக்திகள் விலகும் என பரப்பப்படும் தகவலால் சினிமா நட்சத்திரங்கள் தொடங்கி பல தரப்பு மக்களும் ஆன்லைனிலும், கடைகளிலும் வாங்கி பயன்படுத்தி வருவதைக் காண முடிகிறது.
கோவை: அண்மைக்காலமாக கருங்காலி மாலை அணிந்தால் அதிர்ஷ்டம் வரும், ஆன்மிக பலம் பெருகும், தீய சக்திகள் விலகும் என பரப்பப்படும் தகவலால் சினிமா நட்சத்திரங்கள் தொடங்கி பல தரப்பு மக்களும் ஆன்லைனிலும், கடைகளிலும் வாங்கி பயன்படுத்தி வருவதைக் காண முடிகிறது.
நிஜமான கருங்காலி மரங்கள் கிளைகள் குறைவாகவும், நேராகவும், உறுதியான வைரம் பாய்ந்த மரமாகவும், மிகவும் விலை மதிப்புள்ளதாகவும் உள்ளன. இது ஒருபுறமிருக்க அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை கருங்காலி மரத்தைப் பாதுகாக்கும் ஆராய்ச்சியில் கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் (ஐஎஃப்ஜிடிபி) ஈடுபட்டுள்ளது.