“அவர்கள் அதிமேதாவிகள், களத்துக்கே வராத தற்குறிகள்!” - அமைச்சர் சேகர்பாபு காட்டம்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகளில் வெல்லும் என்ற நம்பிக்கை வீணாகும் என்று, ஒருசிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்துக்கே வராதவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய நிலைப்பாடு 200 அல்ல 234 தொகுதிகளையும் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கைப்பற்றும்

“அவர்கள் அதிமேதாவிகள், களத்துக்கே வராத தற்குறிகள்!” - அமைச்சர் சேகர்பாபு காட்டம்

சென்னை: “வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்லும் என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்துக்கே வராதவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய நிலைப்பாடு 200 அல்ல... 234 தொகுதிகளையும் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கைப்பற்றும்” என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (டிச.7) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகளில் வெல்லும் என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்துக்கே வராதவர்கள் எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய நிலைப்பாடு 200 அல்ல... 234 தொகுதிகளையும் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கைப்பற்றும்.