உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் டிச.16 - 18 மீண்டும் கனமழை வாய்ப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும், தமிழகத்தில் டிசம்பர் 16 முதல் 18-ம் தேதி வரை மீண்டும் கனமழை வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் டிச.16 - 18 மீண்டும் கனமழை வாய்ப்பு

சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும், தமிழகத்தில் டிசம்பர் 16 முதல் 18-ம் தேதி வரை மீண்டும் கனமழை வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (டிச.12) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (டிச.13) லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக் கூடும். நாளை (டிச.14) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.